வவுனியாவில் 30 இலட்சம்பெறுமதியான முத்துக்களுடன் ஒருவர் சிக்கினர்!

வவுனியாவில் ரூ. 30 இலட்சம் பெறுமதியான கஜமுத்துக்கள் இரண்டுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றை அடுத்தே குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நாமல்கம பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்து வருகின்றனர்.