எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மஹிந்த வெளியிட்ட தகவல்!

ஒழுக்கத்தை மதிக்கும், தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்யக்கூடிய, அனைத்து இன மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கக்கூடிய தலைவர் ஒருவரே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிரணியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.