சம்பந்தனின் வீடினை ஈ.பி.ஆர்.எல்.எப் முற்றுகை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டு ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரரணைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தியே திருகோணமலையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் உறுப்பினர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.