பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு எம்.பி க்கள் பலர் சிதறி ஓட்டம்! அவசர கூட்டம்..

இன்று மாலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஒருமித்த முடிவெடுக்க முடியாமல் போனது.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கணிசமான எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்துள்ளனர்.

அரசுக்கு ஆதரவாக எம்.பிக்களை வாக்களிக்க வைப்பதில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் தீவிரமாக முயன்றபோதும், சுமார் ஐந்து வரையான எம்.பிக்கள் ஆதரித்து வாக்களிக்க மறுத்து விட்டனர்.

நீண்ட சமரச முயற்சி நடந்தும், அவர்கள் ஆதரித்து வாக்களிக்க மறுத்து விட்டனர்.

இந்தநிலையில், வாக்களிப்பு நேரம் நெருங்குவதால், வேறொரு உத்தியை கையாண்டுள்ள இரா.சம்பந்தன், அவசரமாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் பிரதானிகளின் உயர்மட்ட கூட்டமான இதில் எடுக்கப்படும் முடிவுக்கு எம்.பிக்கள் கட்டுப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டே, அவசரமாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டப்பட்டுள்ளது.

செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தாத்தன் மதில் மேல் பூனையாக உள்ளனர் இவர்களின் கொள்கை கோட்பாடுகள் என்ன என தெரியாது உள்ளதாக கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.