மீண்டும் அமைச்சர்களாகும் முஸ்லிம் உறுப்பினர்கள்

நாடாளுமன்றதில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இராஜினாமா செய்த 9 முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தங்கள் அமைச்சுப் பதவியை ஏற்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் இன்று இரவு மீண்டும் அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ரிஷாட் பதியுதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து இவர்கள் அனைவரும் ஒன்றாக தமது அமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.