யாழில் இறுதி அஞ்சலியில் கலந்து விட்டு வீடு சென்றவரின் உயிரை பறித்து சென்ற வெயில்..!

வெயில் வேளையில் ஈருருளியில் சென்ற முதியவர் மயங்கி வீழந்ததில் விலா எலும்பு உடைந்தது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் சங்கரன் இராமு என்ற 74 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

மட்டுவிலில் இடம்பெற்ற உறவினரின் இறுதி அஞ்சலியில் கலந்து விட்டு மதிய வேளையில் மறவனபுலவில் உள்ள வீட்டுக்கு ஈருருளியில் சென்றுள்ளார். அவ்வேளையில் மயங்கி வீழ்த்துள்ளார்.

சாவகச்சேரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.