யாழில் அதிகாலையில் நடந்த பயங்கரம்! குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை உபயகதிர்காமம் பெருந்தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை வேளையில் வீட்டின் முன்கதவை உடைத்துக்கொண்டு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கிருந்தவர்களை கொட்டன்களால் தாக்கியுள்ளனர்.

பின்னர் வீட்டினுள் நீண்டநேரம் தேடுதல் நடத்தி வீட்டில் இருந்த நான்கு பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது என்று பொலிஸ் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் மந்திகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடமராட்சிப் பகுதியில் சமீபகாலமாக அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்களால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.