ஈஸ்டர் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்!

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த கருணாகரன் உமாசங்கரி என்ற மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன.

குறித்த தாக்குதலில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட முதலாம் ஆண்டு மாணவி கருணாகரன் உமாசங்கரி என்ற மாணவி சிகிச்சை பலனின்றி இன்று கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சமூக வலைதளம் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.