கல்முனையில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இளைஞர்கள் : காரணம் இதுதான்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு கல்முனையில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

அதனை வரவேற்று நேற்று மாலை கல்முனை மாநகரில் இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.