வட மாகாணத்திற்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

வடமாகாண பேரவைச் செயலகத்தின் புதிய செயலாளராக ரூபினி வரதலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில்முனைவோர் மேம்பாடும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வின் போது வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனினால் இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நியமனங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.