கோத்தபாய யாழ்ப்பாணம் வருகின்றார்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவாகும் நபர் தமிழ் பேசும் மக்களது வாக்குகளுடனேயே கதிரை ஏறமுடியுமென்ற நிலையில் தமிழ் வாக்குகளை சுவீகரிக்க மும்முரமாகியுள்ளார்.

அவ்வகையில் தமிழ் மக்களது வாக்குகளை சுவீகரிக்க யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக கோத்தபாய களமிறங்கவுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளில் அவரது ஆதரவாளர்கள் சகிதம் மும்முரமாகியுள்ளார்.

ஏற்கனவே கொழும்பிலுள்ள தமிழ் ஊடக ஆசிரியர்களை அழைத்து பேசியிருந்த கோத்தபாய தற்போது யாழப்பாணத்தின் பக்கம் தனது பார்வையினை திருப்பியுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் கோத்தபாயவின் பணத்தில் இயங்குவதாக சொல்லப்படும் டாண் தொலைக்காட்சி முழு அளவில் அவருக்கு ஆதரவாக களமிறங்கவுள்ளது