மட்டக்களப்பு பகுதியில் இந்து ஆலயத்திற்குள் இரவில் அத்துமீறி நுளைந்த இஸ்லாமியர்கள் மடக்கி பிடிப்பு

வந்தாறுமூலை விஸ்னு ஆலயத்தில் நேற்று இரவு அத்துமீறி நுளைந்த சில இஸ்லாமியர்கள் மடப்பள்ளிகுள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக சில செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எந்த காரணத்திற்காக குறித்த இஸ்லாமியர்கள் ஆலயத்திற்குள் புகுந்தார்கள் என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாக வில்லை.

நாட்டில் தற்போது பிரச்சினைகள் குறைந்து சாதாரண சூழல் நிலவுகின்ற நிலையில் இவ்வாறான தகவல்கள் குழப்பத்தினை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனினும் இதன் உண்மை தன்மை குறித்து உறுதியான தகவல் வெளியாக வில்லை.