கோத்தாவின் பல கோடி ரூபாய்க்கு விலை போன கருணா மற்றும் பல முக்கியஸ்தர்கள் யார் தெரியுமா?

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் இணைத்ததாக புதிய அரசியல் கட்சியொன்று அண்மையில் உதயமாகியிருந்தது.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில், ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி என்ற பெயருடன் இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அங்குரார்ப்பண கூட்டம் மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பான அதிர்ச்சி தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது.

பல கோடி ரூபா பணம் கொடுத்து கிழக்கில் இந்த ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சியை உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

அதிலும் குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான எகலிய அமைப்பிடம் இருந்தே பல கோடி ரூபாவிற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாய ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பி முத்துவிடம் பல கோடி ரூபா பெறுமதியான பணத்தை வழங்கியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வைக்கும் வகையிலேயே இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கில் உள்ள எல்லா தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க வைக்கவே இந்த ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கருணாவின் பிரதிநிதிகளும், ஈழத்தமிழர் பரப்பில் இயங்குகின்ற 9 அரசியல் கட்சிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், மக்கள் முற்போக்குக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் தேசியத்தை சிதைக்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைக்கும் நோக்கியும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.