இலங்கையில் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு 11 வயது பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி

நுவரெலியா – அக்கரப்பத்தனை – டொரிங்டன் தோட்டத்தில் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு 11 வயதான பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரே உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் மற்றைய சிறுமி காணாமற் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் காணாமற்போன சிறுமியை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.