இலங்கையின் ஒரு பகுதியில் மண்சரிவு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பலாங்கொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் வலல்லாவிட்ட வீதியில் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டு விசேட மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் அனர்த்த அடையாளங்கள் தென்பட்டால் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் மண் சரிவு அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.