கடலுக்கு சென்ற மீனவர்களிற்கு அவசர எச்சரிக்கை

கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன் பிடித்துறைமுகத்துக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தென், தென்மேல் மற்றும் மேல் மாகாண கடல் பிரதேசங்களில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அதேவேளை மீனவர்கள் எவரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் இலங்கை கடற்படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.