காலி துறைமுகத்தில் இயந்திர படகு விபத்து ! மீட்பு பணி தீவிரம்

காலி துறைமுகப் பகுதியில் சிறிய வகை இயந்திரப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.'

இந்நிலையில் குறித்த இயந்திரப் படகில் இருந்தவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த படகு விபத்துக்குள்ளாகியிருக்கலாமேன மீட்பு படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் சேத விபரங்கள் தெரிவிக்கப்படாத நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.