சற்றுமுன்னர் வவுனியாவில் கோர விபத்து ! இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில்...

வவுனியா திருநாவற்குளத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாண்டிக்குளத்தில் இருந்து குருமன்காட்டை நோக்கி சென்ற டிப்பர் வாகனத்துடன் தாண்டிக்குளத்தில் உள்ள தனது வீடு நோக்கி சென்ற நல்லலிங்கம் உசாந்தன் வயது 23 என்ற இளைஞனே விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக கால் பகுதியில் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக அங்கிருந்தவர்களால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் மோட்டார் சைக்கிளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.