நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய தகவல்! இலங்கை மின்சார சபை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இரத்தினபுரி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.