களு கங்கையை அண்டி வாழும் மக்களே அவதானம்! பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தல்

களு கங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயிர்வதன் காரணமாக அதனையண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் களுகங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயர்வதன் காரணமாக அதனையண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரத்தினபுரி, எலபாத, கிரியெல்ல மற்றும் ஆயகம பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.