அனந்தி சசிதரன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியிடம் தஞ்சம் புகுந்தாரா?

வடமாகாண முன்னாள் மகளீர் விவகாரங்களுக்கான அமைச்சர் அனந்தி சசிதரனுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்த்தர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக பேசப்பட்ட நிலையில் அது சாத்தியமற்றதாகிவிட்டது.

இந்நிலையில் இன்று மாலை அனந்தி சசிதரனுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தா்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் அனந்தி சசிதரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது குறித்து பேசப்பட்டதா?

அல்லது முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் நெருங்கிய தரப்பான அனந்தி சசிதரன் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் முன்னாள் முதலமைச்சருக்கும் இடையிலான கூட்டு தொடர்பில் ஆராய்ந்தாரா?

என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.