இலங்கை மக்களுக்கு இராணுவம் விடுத்துள்ள அழைப்பு! எதற்கு தெரியுமா?

வருடாவருடம் ஏப்ரல் மாதம் இடம்பெறும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் இவ்வருடம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத காலத்தில் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ்வாறு குறித்த போட்டிகள் தாமதமாக நடத்தப்படுகின்றன.

இதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தியத்தலாவ இராணுவ பயிற்சி முகாமில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கம்பஹா, கனேமுல்லையில் உள்ள இராணுவ முகாமில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் LHSC.சில்வா தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதன்போது, தியத்தலாவ இராணுவ பயிற்சி முகாமில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொமாண்டர் உபாலி ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன் பொதுமக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

மேலும், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை வாகன ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் காமில் ஹூசைன் கலந்து கொண்டு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.