இலங்கையிலுள்ள சில பாடசாலைகளுக்கு பெயர் மாற்றம்!

ஊவா மாகாணத்தின் பதுளை, மொனராகலை மாவட்டங்களில் இயங்கிவரும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் இதுவரை காலமும் வழங்கி வரும் பெயர்களை பொருத்தமான முறையில் மாற்றம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சின் செயலாளர் ஜீ.கே.எஸ். எல். ராஜதாசவிற்கும், அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு மாகாணத்தில் உள்ள சகல தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் இவ்விடயம் தொடர்பாக கடிதமொன்றை அனுப்பியுள்ளது.