மாகாண சபை தேர்தலில் போட்டியிட தயாராகும் ஐ.தே.க. எம்.பிக்கள்! இவர்கள் தான்...

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட சில ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் தங்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இராஜினாமா செய்யவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கமைய,

மேல் மாகாணம் - சுஜீவ சேனசிங்க (அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்)

தென் மாகாணம் - புத்திக பத்திரண (பதில் அமைச்சர்)

மத்திய மாகாணம் - வசந்த அலுவிகாரே (இராஜாங்க அமைச்சர்)

வடமேல் மாகாணம் - ஜே.சி. அலவத்துவல (இராஜாங்க அமைச்சர்)

கிழக்கு மாகாணம் - இம்ரான் மஹ்ரூப் (பாராளுமன்ற உறுப்பினர்)

சப்ரகமுவ மாகாணம் - ஹேசா விதானகே (பாராளுமன்ற உறுப்பினர்)