தமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை! இவரைத் தெரியுமா?

மட்டக்களப்பு செங்கலடி முருகன் ஆலயத்தில் அண்மையில் நடந்த பொதுக் கூட்டத்தில் 12 இலட்சம் ரூபாய்க்குரிய கணக்கு விபரங்கள் இல்லாததால் அதனை தட்டிக் கேட்ட நபருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நடந்த அடிதடியில் ஒருவர் காயம் அடைந்ததுடன் நான்கு பேரை ஏறாவூர் பொலீசார் கைது செய்வதற்கு சென்றதாக ஏறாவூர் பொலீசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்த நிர்வாகம் 12 இலட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிவிட்டதாக ஏறாவூர் பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் அண்மையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆலய நிர்வாகம் சரியாக கணக்கு காட்ட தவறியதுடன் கடைசி ஒரு வருடமாக பொது மக்களிடம் இருந்து சேர்த்த 12 இலட்சம் ரூபாய் பணத்திற்கு எந்தவித செலவுகளையும் காட்ட முடியாமல் போயுள்ளது.

இதனால் 12 இலட்சம் ரூபாய்க்கு என்ன நடந்தது என தெரியாது பொருளாளர் திக்குமுக்காட அதனை தட்டிக் கேட்ட ஒருவரை நிர்வாகத்தில் உள்ளவர்கள் தாக்கியதால் காயமடைந்த குறித்த நபர் பொலீஸ் அவசரப் பிரிவுக்கு அழைத்ததன் காரணமாக சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் பொலீசார் விசாரணை நடத்தியதுடன் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை கைது செய்து பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

மட்டக்களப்பு செங்கலடி முன்னாள் சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் தற்போதைய மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தருமாகிய லலிந்திரன் என்பவரே 12 இலட்சம் ரூபாயை சுருட்டிய நிர்வாகத்தின் செயலாளர் என்பதனால் தனக்கான அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி 12 இலட்சம் ரூபாய் ஊழலை மூடி மறைத்து.

தனது நிர்வாகத்தில் இருந்து ஊழல் செய்தவர்களையே மீண்டும் நிர்வாகத்தில் வைத்துள்ளதாக ஏறாவூர் பொலீசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை 12 இலட்சம் ரூபாய் பணத்தை நிர்வாகத்தில் உள்ள பலர் பிரித்து எடுத்துவிட்டு அந்த பணத்தை தன்னிடம் தராததால் 12 இலட்சம் ரூபாய்க்கான கணக்கை காட்டமுடியாமல் உள்ளதாக பொருளாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஒரு ஆலயத்தில் 12 இலட்சம் ரூபாய் பொதுமக்களின் பணத்தில் ஊழல் நடந்துள்ளது நேரடியாக தெரிந்ததும் அது சம்பந்தமானவர்களை கைது செய்து விசாரணை நடத்தாது பொலீசார் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன் பொதுமக்களின் பணத்தை ஊழல் செய்தவர்களை உடனடியாக கைது செய்து அந்தப் பணத்தை மீளப் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.