வாகன ஓட்டுனரால் தடுக்கப்பட்ட குண்டுத்தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நடக்கவிருந்த மற்றுமொரு அழிவை தடுத்து நிறுத்துவதற்காக பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் வழங்கிய வாடகை வாகன ஓட்டுனர் ஒருவர் தமது அனுபவத்தை தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரானின் தந்தை மற்றும் சகோதரர் உட்பட குழு சம்மாந்துறை மற்றும் நிந்தவூரில் உள்ள வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்பில் குறித்த வாகன ஓட்டுனரே தகவல்கள் வழங்கியிருந்தார்.

குறித்த வெடி பொருட்கள் நீர்கொழும்பில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

குறித்த வெடி பொருட்கள் எடுத்துச் செல்வதற்காக அவர்கள் தனியார் வாடகை சேவை நிறுவனத்தை அணுகியதாகவும் அதற்காக குறித்த ஓட்டுனர் ஏப்ரல் 9 ஆம் திகதி மாலை நீர்கொழும்பில் உள்ள குறித்த இடத்திற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த வாகன ஓட்டுனர் தனது வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்படுவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பாதுகாப்பு பிரிவினர்களுக்கு குறித்த இரு வீடுகளையும் காட்டுவதற்காக ஏப்ரல் 26 ஆம் திகதி சம்மாந்துறை நோக்கி பயணம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை வீட்டை சுற்றிவளைத்த போதே குறித்த வீட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

குறித்த வெடிப்பு சம்பவத்தின் பின்னர் தனது உயிருக்கு ஆபத்து நிலவுவதன் காரணமாக தனது வேலை வாய்ப்பையும் விட்டதாக குறித்த வாகன ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.