யாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா! அலை மோதும் கூட்டம்..

வளம் கொழிக்கும் பூமியான யாழ் மண்ணிலும் கூட, அருமையான விவசாய நிலங்கள் கிருமிகளை அகற்றும் பீடை நீக்கிகள் எனக் கூறப்படும் ரசாயனக் கலவை மிக்க மருந்துகளினால் எமது விவசாய விளைபொருட்கள் அனைத்தும் நச்சுத் தன்மையாகிவிட்டன.

இவை நஞ்சுதான் என தெரிந்து கொண்டும் எமது பிள்ளைகளுக்கு உண்பதற்காக கொடுக்கும் கையாலாகாதவர்களாக நாம் மாறிட்டோம்.

காலத்தின் கோலமாக எமது இலங்கை மண்ணில் வர்த்தக நடவடிக்கைகளில் ஊழல்களும், மோசடிகளும் மலிந்து விட்டன.

வர்த்தகர்கள் தமது வியாபராரத்தை முன்னிறுத்தி செயற்படுவதால் நாம் உண்ணும் அனைத்து உணவு வகைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் பெரும்பாலும் இருப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஆனால், விதிவிலக்காக இங்கு படத்தில் உள்ள இந்த வயது முதிர்ந்த வியாபாரியைப் போல, மிகச் சிலரே பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத நச்சுத் தன்மையற்ற,மருந்து அடிக்காத பழவகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

ஆம், யாழ் புத்தூர் பருத்தித்துறை வீதியில் இம் முதியவரின் பழக் கடையில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழம் மற்றும் பப்பாசிப் பழங்கள் எவ்வித மருந்து வகைகளும் தெளிக்கப்படாத முற்றிலும் சுகாதாரமான முறையில் விற்க்கப்படுகின்றன.

இதனால் பெருமளவு பொதுமக்களும் இவரது கடைக்கு தினமும் படையெடுத்து மகிழ்வுடன் பழங்களை வாங்கி உண்ட வருகின்றனர்.

சுத்தமான சுகாதாரமான பழங்களை விற்கும் இம் முதியவரின் பழக்கடைக்கு சுகாதாரத் திணைக்களம் நற்சான்றிதழ் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது.மற்றவர்களும் நலமுடன் வாழ வேண்டும் என சிந்தித்து செயற்படும் இந்த முதியவருடைய வியாபாரம் சிறப்புற நாமும் வாழ்த்துகின்றோம்.