தமிழர்கள் இப்படிச் செய்தால் கோத்தா ஜனாதிபதி?

நடுநிலையா நண்பனின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பதிவு 90% தமிழர்களின் நிலைப்பாடும் இதுவே தான்

ஜனாதிபதி தேர்தல் இலங்கை

இத்தேர்தலில் மகிந்த - மைத்திரி அணி சார்பாக கோத்தா என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்..

தமிழர்களாகிய நாம் கோத்தாவிற்கு வாக்களிக்கலாமா.??

கூட்டமைப்பு எவரை ஆதரிக்கிறதோ எதிர்கிறதோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி எவரை ஆதரிக்கிறதோ எதிர்கிறதோ என்பது முக்கியமில்லை..

எவருக்கு நாம் வாக்கு போட்டும் எமக்கு எதுவும் நன்மை நிகழ சாத்தியமில்லை அதற்காக கோத்தாவை ஜனாதிபதியாக இருத்துவது எமக்கு நாமே கண்ணில் குத்திக்கொள்வதற்கு ஒப்பானது.

ஒருசாரார் இத்தேர்தலை தமிழர்கள் புறக்கணிப்பது நல்லது என்பதை கருத்தாக முன்வைக்கிறார்கள், இது அறிவிலித்தனமானதாகவே கருதலாம் புறக்கணிப்பு கோத்தா என்பது வெளிப்படை.

கடந்த காலத்தில் புறக்கணிப்பின் மூலம் மகிந்த ஆட்சி கதிரையில் ஏற்றியவர்கள் நாம், அதே தவறை இம்முறையும் நிகழாது சரியான முறையில் சிந்தித்து தமழிர்களா ஒன்றிணைந்து கட்சி பேதமின்றி எம்மை நாமே பாதுகாத்து கொள்வதே நன்மை பயக்கும் என சமூக வலைத்தளங்களில் கருத்து பகிரப்படுகிறது.