விடிந்த பின் இலங்கையில் குறட்டை விட்டு தூங்கும் அமைச்சர்கள்

அமைச்சரவை கூட்டத்தை காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

முன்னர் 9 மணியளவில் ஆரம்பித்த அமைச்சரவை கூட்டம், இரண்டு வாரங்களின் முன்னர் 7.30 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

எனினும், தொலைவிலிருந்து வரும் அமைச்சர்களிற்கு சிரமமாக உள்ளதாகவும், காலை 8.30 மணிக்கு அமைச்சரவையை கூட்டும்படியும் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், அந்த கோரிக்கையை ஏற்காத ஜனாதிபதி, இன்றும் காலை 7.30 மணிக்கே அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார்.

இன்றைய அமைச்சரவை கூட்டம் ஆரம்பித்த போது, ஐந்து அல்லது ஆறு அமைச்சர்களே பிரசன்னமாகியிருந்தனர்.

கூட்டம் தொடங்கி நடந்து கொண்டிருந்தபோதே, அமைச்சர்கள் மெதுமெதுவாக வந்து சேர்ந்துள்ளனர்.