அமைச்சரவையின் அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மக்கள்

பெருந்தோட்டதொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொடுப்பனவு தொடர்பிலான விசேட அமைச்சரவை பத்திரம் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்த நிலையிலும் குறித்த 50 ரூபா மேலதிக கொடுப்பனவு பெருந்தோட்ட அமைச்சின் ஊடாக வழங்க முடியாது என்று அமைச்சர் நவீன் திஸாநாயக்க கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.

மலையக அரசியல்வாதிகளின் கோரிக்கைகளுக்கு அமைய இன்று சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதுடன்.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மேலதிகமாக ஒரு நாளைக்கு 50 ரூபா வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.