மகிந்தவின் கூடாரத்தில் வெடித்தது பூகம்பம்! முக்கியஸ்தர் போர்க்கொடி

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான தற்போதைய வேட்பாளர் ஒரு காலத்தில் இராணுவ அதிகாரியாக இருந்தார். பின்னர் பாதுகாப்பு செயலாளராக இருந்தார்.

பொதுமக்கள் தொடர்பு குறித்து அவருக்குத் தெரியாது என்று சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

கோட்டபய ராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரங்களின் போது கூட மரியாதையாக பேசுவதில்லை. அவர் ஜனாதிபதியானால் எதிர்காலத்தில் யாரும் அவரை சந்திக்க கூட முடியாது என்று முத்துஹெட்டிகம தெரிவித்தார்.

காலியில் நடைபெற்ற ஒரு விழாவின் போது அவர் ஊடகங்களுக்கு இந்த கருத்தை தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், கோட்டாபய பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அவர் அந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் நல்லுறவுடன் பணியாற்றவில்லை என்றும் முத்துஹெட்டிகம குற்றம் சாட்டினார்.

இத்தகைய சூழ்நிலைகளில், அவர் மக்களுடன் எவ்வாறு நல்லுறவு கொள்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றார்.