கோத்தபாய மன்னிப்பு கேட்பது இருக்கட்டும் பிரதமரே..! நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்பீர்களா..?

கோத்தபாய மன்னிப்பு கேட்பது இருக்கட்டும் பிரதமரே. பின்வரும் விடயங்களுக்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்பீர்களா..?

மத்தியவங்கி கொள்ளையில் ஈடுபட்ட உங்கள் நண்பன் அர்ஜுன் அவர்களை வெளிநாடு தப்பிச்செல்ல விட்டதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்.

கிந்தோட்டை, அம்பாறை, திகன கலவரங்களின்போது சட்டம் ஒழுங்கு அமைச்சு உங்கள் கையிலிருந்தும் அந்த கலவரங்களை அடக்கத் தவறியமைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஞானசாராவை நாய்க்கூண்டில் அடைப்பேன் என்றுகூறிய நீங்கள் அதனைச் செய்யவில்லை அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்.

தம்புள்ள பள்ளிவாசலுக்கு தீர்வை வழங்க நீங்கள் முயற்சிக்கவில்லை அதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்.

இனவாத கலவரங்கள் நடப்பதற்கு முன் உங்களிடம் விடயத்தை எத்திவைத்து பாதுகாப்பு தாருங்கள் என்று கேட்டபோது உடனே பாதுகாப்பு தருவதாக கூறி ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்.

ஈஸ்டர் குண்டுதாக்குதலை ஏற்கனவே அறிந்திருந்தும் அதனை அடக்கத் தவறியமைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

முஸ்லிம்களின் உயிர் உடமைகளுக்கும் பள்ளிவாசல்களுக்கும் சேதம் விளைவித்தபோதும், அதனைச் செய்த இனவாதிகளை கண்டிக்கத் தவறிய நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்.

இப்படி எத்தனையோ விடயங்களை நாங்கள் பட்டியலிட முடியும். இந்தனைக்கும் நீங்கள் மன்னிப்பு கேட்டுவிட்டு மற்றவர்களை நோக்கி நீங்கள் கைநீட்டவேண்டும். இதுதான் பிரதமருக்கு அழகு என்று நினைக்கிறேன். என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.