முல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்... இரவு நேரங்களில் வெடிகுண்டு சத்தம்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இரவு நேரங்களில் வெடிகுண்டு சத்தம் கேட்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.குறிப்பாக 12.08.19 அன்று இரவு 8.00 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குண்டுசத்தம் ஒன்று கேட்டுள்ளது.

அதனை அடுத்து அடுத்த நாளான 13.08.19 அன்று இரபு 9.00 மணிக்க மேல் பல தடவைகள் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்டுள்ளன இதனால் இரவு நேரங்களில் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.

இரவு நேரங்களில் இவ்வாறு இரண்டாவது நாளாக இடம்பெற்ற வெடிப்பு சத்தங்களை கேட்கக்கூடியதாகவுள்ளதாகவும் என்ன நடக்கின்றது என்று தெரியாத நிலையில் நின்மதியினை இழந்து வீடுகளில் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.