ராஜித – சஜித் மூடிய அறைக்குள் பேச்சு!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் விடயம் குறித்து அமைச்சர்களான சஜித் பிரேம்தாச - ராஜித் சேனாரத்ன ஆகியோருக்கிடையில் முக்கியமான பேச்சு இன்று நடந்தது.

சுகாதார அமைச்சில் நடந்த இந்த சந்திப்பில் பிரபல பிக்கு ஒருவரும் கல்ந்து கொண்டார். பிக்குவின் ஏற்பாட்டில் நட்ந்ததாக சொல்லப்படும் இந்த சந்திப்பு இரண்டுமணி நேரம் நடந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் கூட்டணி குறித்து இங்கு விரிவாக பேசப்பட்டது. கூட்டணி அமைத்த பின்னர் வேட்பாளரை தீர்மானிக்கலாம் என்று கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டது.