மஹிந்த - கோத்தபாய ஆட்சியில் இராணுவத்தின் தயவில் தமிழ் ஒட்டுக்குழுக்கள் நிகழ்த்திய கொடூர சம்பவம்கள்!

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த பொது பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் அங்கீகாரத்தோடு இலங்கை ராணுவத்தின் தயவில் தமிழ் ஒட்டுக்குழுக்கள் கொலை கற்பழிப்பு கடத்தல் கொள்ளை என்பவற்றில் பகிரங்கமாக ஈடுபட்டன.

யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா, வவுனியாவில் சித்தார்த்தன் சார்ந்த புளொட், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதிகளில் கருணா, பிள்ளையான் குழுக்கள் மனித வேட்டையாடின.

அரசியலுக்கு அப்பால் கும்பல்கள் சிறு குழந்தைகள் , பெண்கள் என யாரையும் இந்த கும்பல்கள் விட்டு வைக்க வில்லை. கிழக்கில் திருகோணமலை பாலையூரில் வர்ஷா என்கிற 6 வயது சிறுமியை 3 கோடி கப்பம் கேட்டு 2009 ஆண்டு மார்ச் மாதம் பிள்ளையான் கும்பல் கொன்று வீசியது.

வடக்கில் யாழ்.நெடுந்தீவில் ஜேசுதாசன் லக்சாயினி என்கிற 13 வயது சிறுமியை டக்ளஸ் கும்பல் கற்பழித்து கொன்று வீசியது அதே கால பகுதியில் பிள்ளையான் குழுவால் கல்முனைப் பகுதியில் வீட்டினுள் வைத்து இரு சகோதரிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.

வெல்லாவெளியில் 28.02.09ல் 14வயது சிறுமி புனிதவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 02.03.09ல் மகாதேவி சிவகுமார் என்ற பெண்ணின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதே நேரத்தில் வெல்லாவெளியில் இன்னொரு பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

அதே போல 29 ஜனவரி 2006 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனங்கள் பிள்ளையான் கும்பலால் கடத்தப்பட்டன . கடத்தப்பட்டவர்களில் ஒருவர் வட்டக்கச்சியைச் சேர்ந்த தனுஸ்கோடி பிறேமினி.

பிளளையான் கும்பலை சேர்ந்த சேர்ந்த பிரதீபன் என்றும் அழைக்கப்படும் சிந்துயன், சித்தா அழைக்கப்படும் பிரதீப்,ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன், சச்சி என்று அழைக்கப்படும் சாந்தன், ஜீவா என்று அழைக்கப்படும் திலகன் இவர்களினால் இந்த பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இறுதியில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த கும்பல்கள் ராணுவத்திற்கு பெண்களை பயன்படுத்தி விபச்சாரமும் செய்தன (இந்த வேலையை செய்த கருணா குழுவை சேர்ந்த முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதலவர் பதமினி விபச்சார வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு இருந்தார்) .

இலங்கை அரசாங்கம் நியமித்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு , காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான ஆணைக்குழு மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் குழு உள்பட பல்வேறு அமர்வுகளின் போது வழங்கிய சாட்சியங்களிலும், இந்த குழுக்களுக்கு எதிரான போதிய முறைப்பாடுகள் பொதுமக்களால் செய்யப்பட்டன . சாட்சியங்களும் கொடுக்கப்பட்டன.

நாங்கள் தெரிவு செய்த நல்லாட்சி அரசாங்கம் குறிப்பாக ரணில அரசாங்கம் கடந்த சில வருடங்களாக பொலிஸ் அமைச்சை தன வசம் வைத்து இருந்தது . இந்த ஒட்டுக்குழுக்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்க முடியும் . இந்த கும்பல்களை வேரறுத்து இருக்க முடியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று கொடுத்து இருக்க முடியும்.

காணாமல் ஆக்க பட்ட பலரை கண்டு பிடித்து இருக்க முடியும். ஆனால் UNP அரசாங்கம் செய்ய தவறியது. வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக நடக்கவில்லை. குற்றவாளிகள் மீது குறைந்த பட்சம் விசாரணை கூட நடத்தப்படவில்லை. இப்போது மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து இருக்கிறோம்.

கோட்டபாய ராஜபக்சே மீண்டும் அரங்கிற்கு வந்து இருக்கும் பெறுகின்றன. வடக்கு கிழக்கு பகுதிகளில் கூலிக்கு வெடி கொளுத்தி ஆர்பரிக்கின்றன. அப்பாவி மக்கள் தான் பாவம்.

படம் 1 & 2 : அம்பாறை மாவட்டத்தில் கடத்தல் கொலை கொள்ளையில் ஈடுபட்ட இனியபாரதி என சொல்ல படும் ராணுவ ஒட்டுக்குழுவை சேர்ந்த ஒருவனின் இலக்க தகடற்ற வெள்ளைவான்.