புதிய ஓய்வூதிய கட்டமைப்பு தயாரிக்கப்படவுள்ளது

25 ஆயிரம் ஓய்வூதிக்காரர்களுக்கான புதிய ஓய்வூதிய கட்டமைப்பு தயாரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய கொடுப்பனவில் உள்ள குளறுபடிகளை நீக்கும் யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஒய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்தார்.

ஏனைய ஓய்வூதியக்காரர்களின் புதிய ஒய்வூதிய கட்டமைப்புகள் விரைவில் தயாரிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஓய்வூதிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு என அரசாங்கம் மேலதிகமாக 1.25 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.