இரத்மலான பகுதியில் பெண் கைது

இரத்மலான பகுதியில் 2 கிராம் 60 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதை பொருளை தன்வசம் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலான பகுதியில் வசிக்கும் 49 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த உள்ளதாக, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.