வவுனியாவில் அதிசய வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள்

வவுனியா - தாண்டிகுளம் பகுதியில் வெள்ளை நாகத்தால் ஏ9 வீதிப்பகுதியில் சற்று நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தாண்டிக்குளம் பகுதியில் வயல் வெளியில் இருந்து வெள்ளை நாகமொன்று வீதிக்கு வந்துள்ளது.

இதனையடுத்து அந்த பகுதியால் சென்றவர்கள் அனைவரும் குறித்த நாகத்தினை பார்வையிட குவிந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வெள்ளை நாகம் வீதியில் நின்ற மோட்டார்சைக்கிளொன்றுக்குள் ஒளிந்து கொண்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அங்கு நின்றவர்களின் முயற்சியால் அந்த வெள்ளை நாகமானது சாந்தசோலை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் காரணமாக ஏ9 வீதியில் சற்றுநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.