வவுனியாவில் துரத்தி துரத்தி புலனாய்வாளர்கள் அட்டகாசம்

வவுனியாவில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொண்ட போராட்டத்தினையும் அதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் துரத்தி துரத்தி தூர நோக்கி புகைப்படம் பிடித்த சிவில் உடை தரித்த புலனாய்வாளருடன் உறவுகளின் இணைப்பாளர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் அவரது அடையாளத்தையும் உறுதிப்படுத்துமாறும் போராட்டத்தைப் புகைப்படம் பிடிப்பவர்கள் யார் என்று உறுதிப்படுத்துமாறும் கோரியபோது அவர்களிடமிருந்து எவ்விதமான பதிலும் தெரிவிக்கவில்லை. அத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் அவர்களின் கைகளில் தாங்கியிருந்த பதாதைகளையும் சுற்றி சுற்றி புகைப்படம் பிடித்துள்ளார்.

இந்நடவடிக்கை காணாமல் போன உறவுகளை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.