பிரதமர் ரணிலுக்கு சஜித்திக்கு இடையே முக்கிய கலைந்துரையாடல்!

ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் குழப்பநிலை நிலவுகின்ற சூழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த குழப்பநிலைக்கு தீர்வை காணும் நோக்கத்துடனேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்றைய சந்திப்பில் புதிய கூட்டணியை அமைப்பது மற்றும் கூட்டணிக்கான யாப்பு குறித்தும் ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

. இந்த விவகாரங்கள் தொடர்பில் சனிக்கிழமை மீண்டுமொரு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.