இலங்கையில் முதலாவது இலகுவகை ரயில் சேவை!

இலங்கையின் முதலாவது இலகுவகை ரயில் சேவையினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் முதலாவது கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொழும்புக்கும் மாலபேக்கும் இடையேயான 16 கிலோமீற்றர் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த 16 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட ரயில் சேவைக்காக 16 நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்தப் பணியில் நிபுணத்துவம் வாய்ந்த ஐந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.