தொடை தெரியும் ஸ்கேட்டுக்கு அனுமதி இல்லை... அபாயாவுக்கு அனுமதி!

ஆர்வலர் ஒருவர் கூறியது ஜே.வி.பியின் கூட்டத்திற்கு பகல் ஒரு மணிக்கு போனேன். எம்பீ. நிஹால் கலப்பத்தியும் நானும் செக்பண்ணி உள்ளே விடும் இடத்தில் நின்றோம். பீடி சிக்ரேட் சாராய போத்தல் வெத்திலை பொலித்தீன் அணுமதிக்கவில்லை. மினி ஸ்கேட் தொடை தெரியும் உடை அனுமதிக்கப்படவில்லை.

முஸ்லிம் ஹபாயாவும் இந்து பெண்கள் சாரியும் சிங்கள பெண்கள் லமா சாரியும் அணிந்து வந்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து தெரிவித்தோம்.

அவர்களின் இந்த முயற்சியைப் பார்த்து பலருக்கு ஆனந்த கண்ணீர் கசிந்தது அவர்களுக்கு சோற்றுப் பார்சல் கொடுக்க வில்லை. பஸ்ஸுக்கு அவர்களுக்கு ஸல்லி கொடுக்கவில்லை. டிகட் எடுத்து வந்தார்கள் மக்கள். தண்ணீர் கூட‌ மக்கள் எடுத்து வந்தார்கள்.

இவை எல்லாவற்றையும் விட இனவாதத்திற்கு சிறிதும் இடமில்லாத ஒரு சமூகத்தைக் கண்டோம். எல்லோரையும் அன்பாய் நேசிக்கும் ஓர் சமூகத்தை கண்டோம். இதை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும்.