மத மாற்றம் செய்யும் குழுக்கள் யாழில் நிகழ்ந்தும் அட்டூழியம்! தட்டிக்கேட்ட 5 பெண்களுக்கு நேர்ந்த நிலை

யாழ்.பொன்னாலை பகுதியில் கிறிஸ்த்தவ மத பிரச்சார நடவடிக்கைகள் அதிகாித்திருக்கும் நிலையில் அதனை தட்டிக்கேட்ட 5 பெண்கள் உட்பட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பொன்னாலை பகுதியில் அண்மைக்காலமாக திட்டமிட்ட மத பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக இந்தப் பகுதிகளில் உள்ள ஏழை மக்களை இலக்குவைத்து இந்த மத பிரச்சாரம் மற்றும் மதமாற்ற நடவடிக்கை தொடர்கிறது.

இந்நிலையில் மத மாற்ற முயற்சியை கண்டித்த 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 6 பேரை இன்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.