மீண்டும் தோல்வியை தழுவிய ஜனாதிபதி மைத்திரி!

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித்பிரேமதாசாவை பிரதமராக்குவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

சஜித்பிரேமதாசாவை பிரதமராக்கி புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கான முயற்சிகளை கடந்த வாரம் சிறிசேன மேற்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கவேண்டும் என 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினால் தான் அவரை பிரதமராக்க தயார் என சஜித்தின் நெருங்கிய சகாவான அமைச்சரிடம் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சஜித் ஆதரவாளர்கள் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.