ரணிலின் பிரதமர் பதவியை காலி செய்வதற்கு மைத்திரியிடம் சிக்கிய மிகப் பெரும் ஆதாரம்? சூடுபிடிக்கும் தென்னிலங்கை

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை பல வருடங்களாக ஜனாதிபதியிடம் சமர்பிக்கத் தவறியதால் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க முடியும் என்ற தர்க்கம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பின் 48ஆவது பிரிவுக்கு அமைய பிரதமருக்கான பணியை நிறைவேற்றாத குற்றத்தில் இந்த நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதை ஜனாதிபதியிடம் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை எல்லை நிர்ணய விவகாரம் குறித்த உச்ச நீதிமன்ற வியாக்கியானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவை புதிய பிரதமராக நியமிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் பரவியிருக்கும் நிலையிலேயே முன்னாள் பிரதம நீதியரசர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.