கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு ஆண்கள் கைது

பெண்ணாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 7 பிலிப்பைன்ஸ் ஆண்கள் கொழும்பில் கைதாகியுள்ளனர்.

அவர்களுடன் ஒரு உக்ரைன் பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் பி.ஜீ. கயான் மிலிந்த தெரிவித்தார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் உளவுப் பிரிவினர் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் வைத்து இவர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி முதல் சில நட்ககளுக்கு சலுகையாக அறிவிக்கப்பட்ட இலவச வீசா முறைமையைப் பயன்படுத்தி இவர்கள் இலங்கைக்குள் நுழைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.