லொஸ்லியாவின் திருமணம்! நடந்தது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவில் பேசப்படும் லொஸ்லியாவிற்கு திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்து சில புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இவ்வாறு வெளியாகியுள்ள புகைப்படங்கள் தொடர்பில் சில ஊடகங்கள் ஆராய்ந்தது.

லொஸ்லியாவிற்கு திருமணம் நடந்ததாக வெளியாகும் செய்தி முழுமையாகவே உண்மைக்கு புறம்பானது என அவரது தோழி தர்ஷி தெரிவிக்கின்றார்.

திருமணமான ஒருவரின் புகைப்படத்தை எடுத்து, அதனை மாற்றம் செய்து, சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

லொஸ்லியாவிற்கு திருமணம் நடந்ததாக கூறி வெளியாகியுள்ள புகைப்படத்தின் உண்மையாக புகைப்படம் கிடைத்துள்ளது.