சஜித்தை இலக்கு வைத்தார் ரணில்! ஆட்டம் ஆரம்பம்

அமைச்சர் சஜித்தின் கீழுள்ள மத்திய கலாச்சார நிதியத்திலிருந்து 1.2 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தனது செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையிலான குழுவை நியமித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விஷயத்தை மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணநாயக்க எழுப்பினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் கீழ் மத்திய கலாச்சார நிதியம் உள்ளது. தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு முறையற்ற விதமாக அந்த நிதியை சஜித் பயன்படுத்தியதாக அண்மையில், மஹிந்த தரப்பு குற்றம்சுமத்தியிருந்தது. குற்றம்சுமத்தப்பட்ட உடனேயே விசாரணைக்குழுவை அமைத்துள்ளார் ரணில்.

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடாதென எதிர்ப்பவர்களில் ஒருவர் அமைச்சர் கருணநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.