பளை வைத்தியர் சிவரூபன் விசாரணையில் இவ்வளவு வெடிபொருட்கள் மீட்பா?

கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் சிவரூபனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என பொலிசார் அறிவித்துள்ளனர்.

பளை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் (41) கைதுசெய்யப்பட்டு, யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஏகே துப்பாக்கிகள், மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலுக்கு அமைய, வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் கடற்கரையோரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.