ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் ரணில் வெளியீடு

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பான கால அட்டவணையை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

ஜக்கிய தேசியக் கட்சியின் பங்காளி கட்சித் தலைவர்களிடம் பிரதமர் இதனை தெரிவித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை. எனினும் ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் பங்காளி கட்சிகள் முன்வைத்த வலியுறுத்தலுக்கு அமைய, ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்த கால அட்டவணையொன்றை வழங்குவதற்கு பிரதமர் ரணில் உறுதியளித்ததாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.